வவுனியாவில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி
வவுனியா - பூவரசன்குளம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று (30.04.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. இந்தநிலையில், பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமியை அவரின் தாயார் தங்க வைத்துள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
இந்நிலையில் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதனால் வீட்டின் உரிமையாளர்களால் பூவரசன்குளம் வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் சிறுமி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகனான குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
