பாணந்துறையில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞர் கைது
பாணந்துறை பிரதேசத்தில் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, மாலமுல்ல,கோங்கஹகொட்டுவ பிரதேசத்தில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஹிரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவரது வீட்டினுள் அட்டைப்பெட்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11,080 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 5,000 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹிரண பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 10 இலட்சம் ரூபா ஆகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |