யாழில் கடற்றொழில் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுடன் இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தித்துறை- கரையோர பிரதான வீதி அமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் நேற்று (13) கலந்து கொண்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதி கடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட நிதி, நாடு வங்குறோத்து காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
பிரசார நடவடிக்கை
இப்போது நீங்கள் உங்கள் கட்சிக்காரர்களை கூட்டி வைத்து புதிதாக போடுவது போல காண்பிக்கின்றீர்கள்.
வீதி பணி ஆரம்பிப்பு என்று வந்து ஏதும் செய்யாமல் உங்கள் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துவிட்டுச் செல்கிறீர்கள் என இளைஞர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
