கோவிட் பரவலில் இளைஞர்களே முக்கிய இடத்தை பெறுகின்றனர்! - வெளியான தகவல்
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் இளைஞர்கள் காட்டும் குறைந்த ஆர்வத்துக்கு மத்தியில், கொரோனா பரவலில் இளைஞர்களே முக்கிய இடத்தை பெறுவதாக, தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமந்த கினிகே (Dr. Samitha Ginige) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களின் சமூகப் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
3.3 மில்லியன் இளைஞர்கள் மத்தியில் இருந்து 50 வீதமான, 20-30க்கும் இடைப்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள். எனினும் ஏனையோர் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று கினிகே குறிப்பிட்டுள்ளார்.
மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, 90 வீதமான, 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தடுப்பூசிகள், பாலியல் செயலிழப்பு மற்றும் ஆண் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது என்று போலிச் செய்திகளுக்கு பின்னால், எந்த உண்மையும் இல்லை என்று கினிகே தெரிவித்துள்ளார்.