முல்லைத்தீவில் பெற்ற மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு சுதந்திரபுரம் பகுதியில் தனது மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21.03.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இளம் தாய் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக் குழந்தையுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவரின் முதலாவது கணவனுக்கு பிறந்த 7 வயதுடைய பாடசாலை சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது கொடூரமாக தடியால் தாக்கியுள்ளார்.
இதன்போது கிராம மக்கள் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டமையை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயாரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri
