கொழும்பில் பெண்களை விற்பனை செய்யும் நிலையத்தில் திடீரென உயிரிழந்த பெண்
கொழும்பின் புறநகர் பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக கூறப்படும் இடம் ஒன்றில், பணியாற்றுவதாக கூறப்படும் பெண் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
தலவத்துகொட பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென உயிரிழப்பு
மகியங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கிராமத்திற்கு சென்று, நேற்று மாலை தனது பணியிடத்திற்கு வந்த சில நிமிடங்களில், அவர் தரையில் விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை தலங்கம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
