நள்ளிரவு ஏற்பட்ட அனர்த்தம்! பலியான இளம் பெண் - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (03) நள்ளிரவு 12.30 மணியளவில் பெய்த கனமழையின் போது, ஹபராதுவ, கொக்வத்த பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு: கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இமாஷா மதுபாஷினி ஹித்தவன (26) வயதான இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரு பெண்களும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam