விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 21 வயது யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது,சுவிஸ் கிராமம் திரைய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதன் நளாயினி எனும் 21 வயதான யுவதியே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து உறவினர் ஒருவருடன் ஆடைத்தொழிச்சாலை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது வீதியை குறுக்கிட்ட மற்றுமோர் மோட்டார் சைக்கிளை கண்டு அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது பின்னிருந்த யுவதி தவறுதலாக வீதியில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இந்நிலையில்,யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam