2026 வரவு செலவுத் திட்டம் : இதுவரையான ஜனாதிபதி அநுரவின் முன்மொழிவுகள்
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போது ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
2026 - பாதீடு முன்மொழிவுகள்..
இதன்படி,
* அரச நிர்வாகத்தை மறுசீரமைக்கவும், டிஜிட்டல் மயப்படுத்தவும் அடுத்தாண்டு பல திட்டங்கள் நடைமுறை
* இலத்திரனியல் ஆவணப்படுத்தல் திட்ட ஆரம்பம்
* 2025 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்குரிய ஒழுக்க தாபனக் கோவை ஒன்றை உருவாக்க குழு நியமனம்
* 2026 மார்ச் மாதமளவில் டிஜிட்டல் முறைமையிலான சொத்து வெளிப்படுத்தல் கட்டமைப்பு அறிமுகம்

* 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் 823 மில்லியன் டொலர் நேரடி முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளது
* வரி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மூலோபாய திட்ட முறைமை சட்டம், துறைமுக நகர சட்ட திருத்தம்
* அரச வரி திரட்டலை உறுதியாக பேணுவதுற்கு தேசிய கணக்காய்வு சட்டம் அடுத்தாண்டு முதல் திருத்தம்
* அரச - தனியார் பங்குடைமையுடன் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்
* கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மறுசீரமைக்க விசேட குழு நியமனம்
* வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ளவும், முகாமைத்துவம் செய்யவும் சகல அமைச்சுகள் ஊடாகவும் விசேட நடவடிக்கைகள்
* 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடன் பெறும் எல்லை 90% குறைவாக நிலைப்படுத்தப்படும்
* கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படும்
* 2024 ஆம் ஆண்டுக்கு இணையாக 2025 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு அரசமுறை கடன்கள் செலுத்தப்பட்டுள்ளன
* 2025 ஆம் ஆண்டு முதல் 10 மாதகாலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1933 மில்லியன் டொலர் கடன்பற்று பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன
* 2026 ஆம் ஆண்டு அரச வருமானம் 15.3% ஆக பதிவு, 2027 ஆம் ஆண்டு 15.4% அதிகரிக்க உத்தேசம்
* டிஜிட்டல் பொருளாதாரம் ஊடாக அடுத்தாண்டு 15 பில்லியன் டொலர் வருமானம் திரட்ட திட்டம்

* 2026 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை
* இலங்கையின் பண்ட ஏற்றுமதி இந்தாண்டு 9.1 சதவீதத்தால் அதிகரிப்பு
* நிறைவடைந்த 10 மாத காலப்பகுதியில் கொழும்பு பங்குச்சந்தையின் நிதி செயலாற்றுகை வளர்ச்சிப்பெற்றுள்ளது
* நேரடி மற்றும் மறைமுக வரி வட்டி வீதத்தை 40-60 சதவீதமளவில் பேண எதிர்பார்ப்பு
* 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறை 5.2 % குறைவடையும்
* சிறப்பு சலுகைகளுக்கு பதிலாக நியாயமான அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்
* 2026 முதல் காலாண்டில் கொழும்பு துறைமுக நகர சட்டம் மறுசீரமைக்கப்படும்
* அரச - தனியார் பங்குடைமை கண்காணிப்பு சட்டமூலம் அடுத்தாண்டு முதல் காலாண்டுக்கு சமர்ப்பிக்கப்படும்
* பிரதான கைத்தொழில் வலயங்களை அண்மித்த பகுதியில் சேவை வலயங்களை அமைக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
* திகன, நுவரெலியா ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படும்
* வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரே இடத்தில் சேவை வழங்கும் திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
* காணி தொடர்பான தகவல் கட்டமைப்பை உருவாக்க 100 மில்லின் ரூபா ஒதுக்கீடு
