நள்ளிரவு ஏற்பட்ட அனர்த்தம்! பலியான இளம் பெண் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த பெண்ணின் மரணம் மின்னலால் ஏற்படவில்லை என்றும், வீட்டின் கூரை மற்றும் சுவர்களின் சிதறல்களால் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே காரணம் என்றும் திடீர் மரண விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், , ஹபராதுவ, திடீர் மரண விசாரணை அதிகாரி கமல் காமினிதிலக்க முன்னிலையில், கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் நேற்று (04) நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மற்றைய பெண் வைத்தியசாலையில் அனுமதி
கடந்த (03) திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் பெய்த கனமழையின் போது, ஹபராதுவ, கொக்வத்த பகுதியில் உள்ள வீட்டில் மின்னல் தாக்கியுள்ளது.

இதன்போது வீட்டில் தங்கியிருந்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இமாஷா மதுபாஷினி ஹித்தவன (26) வயதான இளம் பெண் உயிரிழந்திருந்தார்.
இதன்போது காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு பெண்களும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும், அவர்கள் அறையில் இருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
மரண விசாரணை அதிகாரி அறிவுறுத்தல்
இந்நிலையில், , ஹபராதுவ, திடீர் மரண விசாரணை அதிகாரி கமல் காமினிதிலக்க முன்னிலையில், கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் நேற்று (04) நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்படி, மின்னல் தாக்கிய பின்னர் வீட்டின் சுவர்களும் கூரையும் இடிந்து விழுந்து அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனை அதிகாரி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மற்றொரு இளம் பெண் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பிறகு, அவரிடமிருந்தும் வாக்குமூலம் பெறுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்