தொடருந்தில் செல்பி எடுத்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த விபரீதம்!
தொடருந்து பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட யுவதியொருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (19.7.2026)) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய தொடருந்து பயணித்தின் போது குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விசாரணை
விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட 3 துருக்கி யுவதிகள் இந்த தொடருந்து பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.