வவுனியாவில் இளம் குடும்பப்பெண்ணின் விபரீத முடிவு
வவுனியா - தோணிக்கல் பகுதியில் நேற்றுமுன்தினம் இளம் குடும்பப்பெண் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோணிக்கல் பகுதியில் திருமணமாகி இரண்டு மாதம் நிறைந்த கைக்குழந்தையுடன் வசித்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவதினத்தன்று இரவு வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற பிறந்த தின மதுவிருந்து
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தனது கணவருக்கு, குறித்த பெண் பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்தி வீட்டிற்கு வருமாறு அழைத்தபோதும் கணவன் வீட்டிற்கு வரவில்லை என தெரியவருகிறது.
மதுபோதைக்கு அடிமையாகிய கணவனின் நடவடிக்கையால் மனமுடைந்து குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சடலத்தை மீட்ட பொலிஸார்
மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
