யாழில் தவறவிடப்பட்ட தங்க நகையை ஒப்படைத்தவர் கட்டிவைத்து தாக்குதல்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த நால்வர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க நகை தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த சிறுதொழிலாளி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுதொழிலாளி நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், அது தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள வந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,
உரும்பிராய் பகுதி
“உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன்.
அதனை குறித்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன்.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் குறித்த வீதியில் செல்லும்போது வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களா என கேட்டேன்.
அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில் அந்தப் பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்தீர்களா என கேட்டேன்.
ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர். இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்கி வைப்போம் என கோரினேன்.
இதன்போது வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து தாக்கினர். நான் சொல்வதை கேளுங்கள் ஏன் தாக்குகிறீர்கள் என கத்தினேன்.
கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்
ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை தாக்கியதுடன் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதலை முன்னெடுத்தனர்.

வீதியால் சென்ற சிலர் என்னை தாக்குவதை அவதானித்த நிலையில் எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டனர்.
முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்கு உள்ளாகிய நான் கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவித்து வைத்தியசாலைக்கு சென்றுவிட்டேன்.
வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியபின் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்றேன் என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.
பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார். எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri