வெளிநாடு செல்ல வரிசையில் நிற்கும் இளைஞர்கள்! - அரசாங்கம் கூறும் காரணம்
இந்த அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கியதனால் இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்ல வரிசையில் நிற்பதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் வரிசையில் காத்திருப்பது நல்ல விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் கூடுதலான வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியதனால் இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்ல வரிசையில் காத்திருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான், இஸ்ரேல், கொரியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதற்காக இளைஞர் யுவதிகள் வரிசையில் காத்திருப்பது பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கோவிட் பெருந்தொற்று காரணமாக பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதனை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
