கந்தளாய் பகுதியில் நண்பர்களுக்கு நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி!
கந்தளாய் - பேராற்று வெளி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (03.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடு திரும்பிய நண்பர்கள்
நான்கு இளைஞர்கள் இன்று முற்பகல் 11. 30 மணியளவில் ஆற்றுக்குக் குளிக்க சென்றுள்ளனர்.
வழக்கமாக, அவர்கள் நீர் அதிகமாக இருக்கும் போது, ஒரு இடத்தில் குளித்து, நீரோட்டத்துடன் மிதந்து அடுத்த பகுதியில் கரையேறுவதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த அன்று, அவர் குளித்த நிலையில், நண்பர்கள் அவரை அடுத்த இடத்திற்கு சென்றதாக கருதி உடைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
300 மீட்டர் தொலைவில் சடலமாக கிடந்த இளைஞர்
பள்ளிவாசல் தொழுகை முடித்த பிறகு நண்பர்கள், குறித்த இளைஞர் வீடு திரும்பாததை கவனித்து தேடத் தொடங்கினர்.
இதற்கிடையில், அவர் குளித்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் நீரின் அடியில் சிக்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதும், இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு, தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..