ஓய்வுக்கொட்டகையில் படுத்துறங்கியபோது அடித்து வீதியால் இழுத்து வீசப்பட்ட இளைஞர்
கடற்கரை ஓய்வுக்கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞரை இரும்புக் கம்பியினால் அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுப்பர்மடத்தை சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞரே மிக மோசமான அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூவர் இணைந்து இரும்புக் கம்பியினால் மிக மூர்க்கமாக்கத் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் மயக்கமுற்றதால் அவரை வீதியால் இழுத்துச் சென்று வீசியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர் கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
