சிறுவர்களின் தவறான காட்சிகளை இணையத்தளத்தில் வெளியிட்ட இளைஞன்
சிறார்களின் தவறான காட்சிகள் மற்றும் சுமார் 500 புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
25 வயதான இந்த இளைஞன் மொனராகலை படால்கும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட கணினி மென்பொருளைப் பயன்படுத்தி சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்வது தொடர்பான நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 453 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.