ரிஷாட் வீட்டில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! தும்புத்தடியால் தாக்கிய இளைஞன்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, உயிரிழந்த ஜூட் குமார் ஹிஷாலினியின் தாய் ஆர்.ரஞ்ஜனி தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்தார்.
இதன்போது, தனது மகளிடமிருந்து தொலைபேசியை பறித்து, ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்து பேசுவதாக, இளைஞன் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததார்.
தனது பிள்ளையை அடிக்க வேண்டாம் என தான் ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் கேட்டுக்கொண்டேன். எனினும், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிய முடியாது என தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியிருந்தார்.
தான் பெற்ற கடனை, மீள செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றார் என அவரது தாய் மேலும் தெரிவித்துள்ளார்.
you may like this video...
