கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கோணாவில், ஊற்றுப்புல பகுதியில் நேற்றிரவு (25.09.2023) 12 மணியளவில் சம்பவம் பதிவாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்தில் கிளிநொச்சி - கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க புஸ்பராசா தினேஸ்கரன் என்பவரே கொல்லப்பட்டு்ளளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
