யாழில் ஆரம்பமாகியுள்ள திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி (video)
யாழ். கொடிகாமத்தில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி ஆரம்பாகியுள்ளது.
குறித்த ஊர்திப் பவனி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முழுவதும் இந்த எழுச்சி ஊர்திப் பவனி செல்லவுள்ளது.
செல்லவுள்ள இடங்கள்
ஊர்திப் பவனியானது கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து கிளிநொச்சியை வந்தடைந்து 26ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.
முல்லைத்தீவு
திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தி இரண்டாம் நாள் பயணம் மாங்குளத்தில் ஆரம்பம் தமிழ் தேசிய அரசியல் செயற்பட்டார்களால் நேற்று (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தியின் இரண்டாம் நாள் பயணம் மாங்குளத்தில் இன்று (25) காலை ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தி கொடிகாமத்தில் இருந்து முழங்காலில் வெள்ளாங்குளம் மல்லாவி ஊடாக மாங்குளம் நகரை வந்தடைந்தது.
இந்த ஊர்தி பவனியின் இரண்டாம் நாளான இன்று (25) காலை மாங்குளம் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பழனியாண்டி நாகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க.சுகிர்தன் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பட்டார்கள் பொதுமக்கள் பலர் தூவி அஞ்சலி செலுத்தினர் மக்களின் உணர்வுபூர்வமான அஞ்சலியை தொடர்ந்து ஊர்தி பவனியானது வவுனியா நோக்கி பயணமாகியுள்ளது.















இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
