கொக்கிளாய் கடலில் இளைஞன் மாயம் : தேடுதல் பணி தீவிரம்...
முல்லைத்தீவு - கொக்கிளாயில் கடலுக்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயமாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கிளாய் கடலிற்கு நேற்றையதினம் (27.08.2025) இரவு கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்றுவரை கரைக்கு திரும்பாத நிலையில், கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படகுகளில் தேடியும்...
குறித்த சம்பவத்தில் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும் வர்ணகுலசூரிய நெகித் ரவிஷ பிரனாந்து என்னும் 23 வயது இளைஞனே மாயமாகியுள்ளார்.
இளைஞன் கடற்றொழிலுக்குச் சென்ற படகு நங்கூரமிட்டபடி நடுக்கடலில் இன்று காலை தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை கடற்றொழிலாளி குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
மேலும், இன்றையதினம் படகுகளில் தேடியும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 25ஆம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் தொழிலுக்குச் சென்ற இளைஞன் மாயமாகிய சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








