ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று நண்பகல் தனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள நரிப்புல் தோட்ட ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும், வலிப்பு நோய் ஏற்பட்டதன் விளைவாக இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் சிலர் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
