யாழில் அதிகளவில் போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞருக்கு நேர்ந்த கதி!
யாழ்.தெல்லிப்பழை பகுதியில் அதிகளவில் போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கை சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட நிலையில் இளைஞர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட இருவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் உடற்கூற்றுப்
பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
