யாழ்.தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய வால்வு சத்திர சிகிச்சையின் போதே உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சங்கானை தொட்டிலடியைச் சேர்ந்த 37 வயதுடைய வைத்தியலிங்கம் கஜூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இருதய வால்வு சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிகளவு குருதிப் பெருக்கே உயிரிழப்புக் காரணம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சகல வசதிகளுடன் கூடிய இருதய
அறுவைச்சிகிச்சை கூடம் உள்ள போதும் மாதத்தில் குறிப்பிட்டளவு சத்திர சிகிச்சையே
மேற்கொள்ளப்படும் நிலையில் தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri