உறக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்
புத்தளத்தில் இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி காலையில் உயிரிழந்தவரின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காலை 7.30 மணியளவில் சகோதரன் ஒருவர் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் எழுந்திருக்கவில்லை எனவும் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மர்ம மரணம்
அவர் கையடக்க தொலைபேசியில் பொருத்திய ஹியர் போன்களை காதில் அணிந்த நிலையில் உறங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவரின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
