நான்கு மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு!
கொழும்பு-நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளை, ஹாலிஎல, திக்வெல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான ராமலிங்கம் மாணிக்கம் எனும் இளைஞனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடிக் கட்டிடத்தில் நிர்மாணத்தொழிலாளியாக வேலை பார்த்த இவர், நேற்று முன்னிரவில் மதுபானம் அருந்தியுள்ளார்.
அதன் பின் தனிப்பட்ட தேவைக்காக நான்காம் மாடியில் இருந்து கீழே இறங்கும் போது மூன்றாம் மாடியில் இருந்து தவறி தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
சம்பவம் தொடர்பில் கட்டிட நிர்மாண ஒப்பந்ததாரர் கொடுத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் நாரஹேன்பிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri
