முச்சக்கர வண்டி கழுவிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி
ருவன்வெல்ல - பட்டுப்பிட்டியாவில் உள்ள வாகன சேவை மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(02.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர், அங்கு பணிபுரிந்த கயன் உதயங்கா என்ற 18 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
18 வயது இளைஞர் உயிரிழப்பு
குறித்த இளைஞர் முச்சக்கர வண்டியைக் கழுவிக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் மின்சாரம் கசிந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இளைஞர், கரவனெல்ல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri