போதைபொருள் பாவனையால் உயிரை பறிகொடுத்த இளைஞன்: நெடுந்தீவில் சம்பவம்
நெடுந்தீவில் இளைஞன் ஒருவர் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (31.10.2023) இடம்பெற்றுள்ளது
ஐஸ் போதைப் பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆளில்லா வீட்டில் சடலம்
நெடுந்தீவு மேற்கு பகுதியை சேர்ந்த குணாராசா தனுஷன் (வயது 25 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்து நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவரை மாலை வரை காணமையால் தேடியபோதே ஆளில்லா வீட்டில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
