உடையார்கட்டில் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (12.10.2025) இடம்பெற்றுள்ளது.
இளம் குடும்பஸ்தர் கைது
108 கிராம் ஐஸ் போதைப்பொருளை தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய குறித்த இளம் குடும்பஸ்தர் கைதாகியுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
