யாழில் போதை மாத்திரைகளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இளைஞன்
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (6) யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 75 போதை மாத்திரைகள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
