ஏறாவூரில் சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய இளைஞன் கைது
மட்டக்களப்பு (Batticaloa) ஏறாவூரில் 14 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரையும் இன்றையதினம் (10.07.2024) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றிருப்பதால் சிறுமி, உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை
சிறுமி, அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் நிலையில், அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த மே மாதம் குறித்த சிறுமியை இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தவறான முறைக்குட்படுத்தியுள்ளதோடு இது தொடர்பாக பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவதினமான இன்று சிறுமியை அடைத்து வைத்து தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டிலும் அவனது தாயை அதற்கு உடந்தையாக இருந்த
குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில்
அனுமதித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri