விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு(Photos)
திருகோணமலை - உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் இவ்விபத்து நேற்று(01) 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்போது திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் (15வயது) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் மற்றைய இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதே இடத்தைச் சேர்ந்த டி.டபிள்யூ.திஸறு அமீக்ஸன (20வயது) சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01ம்) திகதி மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மற்றவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
