மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் குடும்பப் பெண்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இளம் யுவதியொருவர் 25 மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட யுவதி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளம் யுவதி கடந்த வருடம் திருமணம் முடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட விரக்தியில் மனைவி 25 மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின் கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri