கோர விபத்தில் இளம் பொறியியலாளர் பலி
மொனராகல-சியம்பலாண்டுவ வீதியில் ஏற்பட்ட விபத்தில் வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கடந்த 10ஆம் திகதி காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், பிபில நகரைச் சேர்ந்த, அத்திமலை தோட்ட நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணியாற்றிய ஜி.சி. பிரியசாந்த என்ற 31 வயதுடைய இளைஞராகும்.
இளம் பொறியாளர் பலி
அவர் சியம்பலாண்டுவவில் இருந்து பிபில நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனம், மொனராகலவில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் வாகன ஓட்டுநரும், அதில் இருந்த மற்றொரு நபரும் மொனராகல மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிரேத பரிசோதனை
எனினும் ஓட்டுநர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
லொறி ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் மரணம் குறித்து மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam