இந்திய வம்சாவளியின் இளம் மருத்துவருக்கு எதிராக கனடாவில் கடும் எதிர்ப்பு
ரொறன்ரோ பல்கலைக்கழக மருத்துவரும், ஆசிரியருமான இந்திய வம்சாவளி மருத்துவரான ரித்திகா கோயல் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இவர் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி, அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி திறந்த மடல் ஒன்று கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, அது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில் மருத்துவர் ரித்திகா கோயல் தொடர்பில், அவருக்கு ஆதரவாக நண்பர்களும் உடன் பணியாற்றுபவர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
I am incredibly proud today to join over 1000 colleagues in the health community across Canada expressing solidarity with Palestinians living under occupation, and upholding human rights and international law. There is #NoHealthUnderOccupation. https://t.co/UGeueki3dM /1
— Ritika Goel (@RitikaGoelTO) May 20, 2021
கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவர் கோயலை தமக்கு தெரியும் என கூறியுள்ள மருத்துவர் சமந்தா கிரீன், அந்த கடிதத்தை வாசித்து நான் ஆத்திரமடைந்தேன் என தெரிவித்துள்ளார்.தமது வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றி வருபவர் கோயல் என தெரிவித்துள்ளார் .
மருத்துவர் சமந்தா கிரீன். சமீபத்தில் இஸ்ரேல்- காசா போர் மூண்ட நிலையில், பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்த 3,000 கனேடிய மருத்துவ ஊழியர்களில் மருத்துவர் கோயலும் ஒருவர்.
இஸ்ரேல் நாட்டின் நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்தால் உடனையே யூதர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டுவது பெருகி வருவதாக கோயலுக்கு ஆதரவாக பலர் தெரிவித்துள்ளனர்.
In this thread I am sharing my thoughts on Israel and on Palestine (32 tweets). I am sharing because I find that silence is unacceptable for me right now. Situating myself in tweets 1-5. My take on the background and recent events tweets 6-16. My position begins at #17.
— Zac Feilchenfeld (@zacfeilchenfeld) May 21, 2021
மேலும் பாலதீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் கருத்து கூற மறுத்துள்ளதுடன், தனிப்பட்ட ஒருவரின் கருத்துகளுக்காக பல்கலைக்கழகம் பதில் கூற வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.