புத்தாண்டில் நேர்ந்த சோகம்! மகாவலி ஆற்றில் விழுந்து இளைஞர் மாயம்
புத்தாண்டில் நண்பர்களுடன் மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி - ஹல்லோலுவ பகுதியை சேர்ந்த ரவிந்து லக்ஷித விஜேசிங்க என்ற 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த இளைஞர் நண்பர்களுடன் புது வருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு முகம் கழுவுவதற்காக ஆற்றில் இறங்கிய போது திடீரென நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாட்களாக தொடரும் தேடுதல் நடவடிக்கை
இவ்வாறு காணாமல்போயுள்ள இளைஞனை பொலிஸ் உயிர்காப்புக் குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் தேடிய போதும் இன்று (02) பிற்பகல் வரை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாவலி ஆற்றில் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படும் இந்த இடம் இங்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞனை தேடும் பணியில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan