தென்னிலங்கையில் இளம் பெண்களை ஏமாற்றிய இளைஞன் கைது
அவிசாவளையில் பேஸ்புக் ஊடாக இளம் பெண்களை ஏமாற்றிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகளவான பெண்களுடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டு அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அழைத்து செல்லப்பட்ட பெண்களை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, பின்னர் இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள்
அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்ட பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினால் சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 26 வயதான அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பயன்படுத்திய நவீன கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த கைத்தொலைபேசியை பரிசோதித்த போது அதில் பாரிள அளவு எண்ணிக்கையிலான யுவதிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் நிர்வாண காணொளிகள் காணப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri