நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை: சஜித் பிரேமதாச

Sri Lanka
By Kumar Feb 02, 2023 11:32 AM GMT
Report

நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (01.02.2023) மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை: சஜித் பிரேமதாச | You Don T Have To Be A President To Serve

பல சேவையினை செய்திருக்கிறோம்...

எதிர்வரும் தேர்தலின் போது, மட்டக்களப்பு மாவட்ட ரீதியிலே காணப்படக்கூடிய பிரதேச சபைகளிலே எங்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்பாளர்கள் களமிறங்க இருக்கிறார்கள்.

குறித்த தேர்தலில் முடிவுகளின் போது, அனைத்து வேட்பாளர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்து, சபைகளை ஐக்கிய மக்கள் சபையாக்கும் பட்சத்தில் இந்த பிரதேசத்துக்கு தேவையான அத்தனை உதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நாங்கள் நிச்சயமாக செய்வோம் என்று வாக்குறுதிகள் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 74 வருட ஜனநாயக அரசியலிலே செய்ய முடியாத ஒரு சேவையினை நாங்கள் செய்திருக்கிறோம். எப்படி என்று கூறனால், கிட்டத்தட்ட 70 அரசாங்க பாடசாலைகளுக்கு 70 பேருந்து வண்டிகளை நாங்கள் வழங்கி இருக்கிறோம். 56 வைத்தியசாலைகளுக்கு பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கியிருக்கிறோம். 22 பாடசாலைகளுக்கு கணணி, பிரின்டர்ஸ், ஸ்மார்ட் போர்ட் போன்ற பொருட்களை நாங்கள் வழங்கி இருக்கிறோம்.

அது மட்டுமல்ல, கடந்த வருடத்திலேயே டிசம்பர் மாதம் 22ஆம் திகதியிலே மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கிட்னி டயாலிசிஸ் உபகரணத்தை வழங்கியிருக்கின்றோம். இப்படி நாடு முழுவதுமாக நாங்கள் மக்களுக்கு பணியாற்றுவதற்கு நிச்சயமாக ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மக்கள் சேவைகளை நாங்கள் தேடி தேடி செய்பவர்கள்.

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை: சஜித் பிரேமதாச | You Don T Have To Be A President To Serve

அபிவிருத்தி வசதிகளை செய்து தருவோம்...

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. அதிலடங்கும் 144 தொகுதிகள், 345 கிராமிய பிரிவுகள், 1240 கிராமங்களுக்கு கடந்த காலங்களில் நாங்கள் பாரிய சேவைகளை செய்திருக்கிறோம்.

மார்ச் மாதம் 9ஆம் திகதியிலே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மட்டக்களப்பில் இருக்கும் 12 பிரதேச சபைகளிலும் எங்களை வெற்றியடையச் செய்தால், மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு கல்வி, சுகாதாரம் அபிவிருத்தி வசதிகளை நிச்சயமாக நாங்கள் செய்து தருவோம்.

கடந்த காலங்களில் நான் வீடமைப்பு கட்டுமான அமைச்சராக இருந்தபோது, இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாங்கள் வீடுகளை வழங்கி இருந்தோம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கியிருந்தோம். அதேபோல, கடன் அடிப்படையிலானவர்களுக்கு வீடுகள் வழங்கி இருந்தோம். 

அந்த காலத்திலே இந்த பகுதிக்கு நாங்கள் விஜயம் செய்து, ஒவ்வொரு மக்களுடைய குறைகளை கண்டறிந்து எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம்.

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை: சஜித் பிரேமதாச | You Don T Have To Be A President To Serve

ல்லாயிரக்கணக்கான சேவைகளை கொண்டிருக்கிறோம்...

இந்த மட்டுமா நகரிலே இங்கே காணப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அதிகமான வீடுகளை கட்டிக் கொடுத்தது ரணசங்க பிரேமதாசனுடைய மகன் சஜித் பிரேமதாச என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி முதல் தடவையாக உங்களுடைய பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. எந்த விதமான ஒரு ஊழல் இலஞ்சம் அற்ற சரியான முறையில் நேர்மையான மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களை நாங்கள் களமிறக்கி இருக்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் மக்கள் சேவைகளை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக ஒரு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு இலங்கையில் நாங்கள் பல்லாயிரக்கணக்கான சேவைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் கடந்த காலங்களிலே ஒவ்வொரு  கட்சியினுடைய அரசியல் கட்சியினுடைய தலைவரின் பின்பாக சென்றிருப்பீர்கள் அவர்கள் உங்களுக்கு அழகான வாக்குறுதிகளை  வழங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் கூறிய வாக்குறுதிகளை உங்களுக்கு செய்துள்ளார்களா என்று ஒரு கேள்வியை கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும்.

செய்திய்திருப்பார்கள்... எப்படியென்றால், தங்களுடைய பரம்பரை, தங்களுடைய சொந்த பந்தங்களுக்குகே அதிகமான நலத்திட்டங்களை செய்திருப்பார்கள். என்னுடைய மக்களுக்கு அவர்கள் எந்த விதமான நலத்திட்டங்களையும் செய்திருக்க மாட்டார்கள். இதுதான் உண்மை.

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை: சஜித் பிரேமதாச | You Don T Have To Be A President To Serve

சர்வதேசத்துடன் போட்டி 

நான் உங்களை பார்த்து தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.... ஐக்கிய மக்கள் சக்திக்கு நீங்கள் வாக்களியுங்கள். எந்த விதமான கலப்படமும் இல்லாத வேட்பாளனை களத்தில் நிறுத்தி இருக்கிறோம். அவர்கள் உங்களை வைத்து பணம் சம்பாதிக்க முடியாது. மாறாக தங்களுடைய பணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். இதுதான் ஐக்கிய மக்கள் சக்தியுடைய நியதி என்பதை நான் தற்போது உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வெற்றியடையக் கூடிய ஒவ்வொரு சபைகளிலும் நாங்கள் ஸ்மார்ட் கவுன்சிலின் சொல்லக்கூடிய ஒரு விடயத்தை உருவாக்கி அதன் மூலமாக நாங்கள் தகவல் தொழில்நுட்பத்தினையும் கணினி அறிவினையும் அதேபோல ஆங்கில் அறிவினையும் நாங்கள் அந்த பகுதியிலே காணப்படக்கூடிய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கு நாம் கற்பித்திருக்கிறோம்.

அதன் மூலமாக அவர்கள் சர்வதேசத்துடன் போட்டி போடும் அளவுக்கு ஒரு நுண்ணறிவு ஒரு அறிவு கூர்மையான ஒரு சமுதாயத்தை நாங்கள் இந்த பிரதேச சபைகள் வாயிலாக உருவாக்கி இருக்கிறோம்.

அதேபோல இந்த சபைகளுக்குள் சரியான முறையில் வேலைகள் இடம் பெறுகின்றனவா என்பதனை கண்காணிப்பதற்கு இளைஞர் ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கி இளைஞர்களூடாக ஒவ்வொரு சபையிலே நாங்கள் கண்காணித்து இருக்கிறோம்.

அது மாத்திரமல்ல அந்த சபைக்கு உட்பட்ட பகுதிகளிலே காணப்படக்கூடிய ஒவ்வொரு வீடுகளுக்கும் மின்சாரத்தை சேமிப்பதற்கு அதாவது மின்சாரத்தினுடைய விலை குறைக்கும் முகமாக கூரைமேல் சூரிய மின் உற்பத்தி என்று சொல்லக்கூடிய ஒரு மின் உற்பத்தி ஒரு சாசனத்தை நாங்கள் உண்டாக்கி இருக்கிறோம்.

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை: சஜித் பிரேமதாச | You Don T Have To Be A President To Serve

ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம்

அதன் மூலமாக எங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொண்டு எஞ்சிய மின்சாரத்தை நாங்கள் இலங்கை மின்சார சபைக்கு நாங்கள் விற்பனை செய்ய முடியும். அதன் வாயிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் மேலதிகமாக பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய எங்களுக்கு ஒரு தொகையான பணம் கிடைக்கிறது. இப்படி அனைத்து பிரதேச சபைக்கு உட்பட்ட வீடுகளுக்கு நாங்கள் செய்ய இருக்கிறோம்.

மேலும், பகுதிகளில் காணப்படக்கூடிய அதாவது தனவந்தர்களை நாங்கள் தொடர்பு படுத்தி மிகப்பெரிய தொழிற்சாலைகளை நிறுவனங்களை தொடர்பு எடுத்து நாங்கள் இந்த பிரதேச சபையுடன் இணைத்து அவர்கள் அந்த அந்த வெளிநாடுகளை செய்யக்கூடிய அந்த பொருள் உற்பத்தியினை அதே போல பொருளாதார அபிவிருத்திகளை நாங்கள் இந்த பகுதியிலும் நாங்கள் செய்ய இருக்கிறோம்.

மேலும், இலங்கையில் காணப்படக்கூடிய 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் நாங்கள் வெளிநாடுகளிலே காணக்கூடிய பொருள் உற்பத்திமிக்க கம்பெனிகளை அறிமுகம் செய்து அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச சபைகளுக்கும் நாங்கள் இந்த பொருளாதார புரட்சியை, பொருளாதார உற்பத்தியை  மேலே கொண்டு வருவோம் என்ற உத்தரவாதத்தினை கொண்டு வருவோம் என இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US