கொழும்பில் மனைவியுடன் சென்ற யோசிதவின் அடாவடித்தனம் - விடுதியில் நடந்த மோதல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள விடுதிக்கு சென்ற யோசித ராஜபக்ச, அவரது மனைவி உள்ளிட்ட குழுவினர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை யோசித தரப்பு ஏற்க மறுத்தமையினால் முறுகல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பணியாளர்
விடுதிக்குள் நுழைவதற்கான அனுமதி பட்டியலை அணியுமாறு கோரிய நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
யோசித குழுவின் தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்: அஸ்ரப் அலி
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam