யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வன் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேய்சி பொரஸ்ட் என்பவருக்கும் எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அதன் போது யோஷித ராஜபக்ச மற்றும் டேய்சி பொரஸ்ட்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
அவர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு எதிராக இதே குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் , இந்த வழக்கை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் ஜூலை மாதம் 11ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் யோஷித தரப்பின் வேண்டுகோள் குறித்து பரீசிலிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
