யாழ். மண்ணே வணக்கம் செயற்றிட்ட அறிமுக விழா
உலக பண்பாட்டுத் தினத்தை முன்னிட்டு, “யாழ். மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (21.05.2024) யாழ். நாச்சிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாண பண்பாட்டினை பறைசார்ற்றும் யாழ். மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட கைந்நூல் வழங்கலும், பாடல் இசைத்தட்டும் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக விழா
இதன்போது, முதற் பிரதியினை யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை வெளியீட்டு வைக்க, யாழ்ப்பாணப் பெட்டகம் நிறுவகத்தின் ஸ்தாபகர் விஜிதா பாலதாஸ் அதனை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஏனைய அதிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கு கைந்நூல்களும், இறுவெட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் இருந்து வடமாகாண முழுவதும் சமூக அக்கறை கொண்டு மகத்தான பணிகளை முன்னெடுத்து வரும் சமூக நல்லுள்ளங்களுக்கான விருதுகளும், கெளரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணப் பெட்டகம், நிகலுருக்கலைக்கூடம் ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் போராசிரியர்களாகிய கலாநிதி ம.கிருஷ்ணராஜா, சண்முகலிங்கன், மற்றும் சமூக நலன்விரும்பிகள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.