தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசியப் பூங்கா
யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டியுள்ள அபகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் யால தேசியப் பூங்காவின் தொகுதி 1 மற்றும் 2 ஆகியவை தற்போதைக்கு எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படவுள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம்
எதிர்வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை யால தேசியப் பூங்கா பொதுமக்களுக்குத் தற்காலிகமாக மூடப்படும் என்று வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விலங்குகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11