ஜனாதிபதி செயலக வளாகத்தில் நத்தார் விசேட கெரோல் இசை நிகழ்ச்சி
ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள வளாகத்தில் நடைபெறும் நத்தார் விசேட கெரோல் இசை நிகழ்ச்சி மற்றும் கொண்டாடங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி சபை, முப்படையினர், பொலிஸ் திணைக்களம் என்பன இணைந்து ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஒழுங்கு செய்துள்ள நத்தார் விசேட கெரோல் இசை நிகழ்ச்சி மற்றும் கொண்டாடங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.
நத்தார் பண்டிகையை மக்கள் அனுபவிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இன, மத பேதமின்றி ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பு காலிமுகத்திடல் சதுக்கத்தில் நேற்று திரளாக கூடியிருந்தனர்.
காலிமுகத்திடல் அருகில் உள்ள விழா மைதானத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கிருந்தவர்களிடம் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விழாவைக் காண வந்திருந்த சிறுவர்களின் தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களுடன் சில புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டதாகவும் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
முப்படையினர் மற்றும் பொலிஸ் இசைக்குழுவினர் கலந்துக்கொண்ட நத்தார் கெரோல் நிகழ்ச்சி நேற்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நேற்று ஆரம்பமானதுடன் அருகில் உள்ள இலங்கையின் தேசப்பிதா டி.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து ஜனாதிபதி, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
இந்த நத்தார் கொரோல் இசை நிகழ்ச்சியும், கொண்டாட்டங்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
அதேவேளை முப்படையினர் மற்றும் பொலிஸ் இசைக்குழுக்களின் பங்கேற்புடன் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், கொண்டாட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய நத்தார் மரத்தையும் பொதுமக்கள் கண்டுகளிக்க முடியும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
