குடும்பப் பெண் ஒருவர் எடுத்த தவறான முடிவு
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகிழடித்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே நேற்று (09) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தற்கொலைக்கு முயன்றபோது சம்பவத்தை கண்ட அவரின் மகன் தூக்கிலிருந்து மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |