பிரித்தானியாவில் மோசமாகும் வானிலை! பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு 8 hours ago
எதிர்வரும் நாட்களில் பனிப்பொழிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவுள்ளதால் பிரித்தானியாவில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வடக்கு ஸ்காட்லாந்திலும், ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு இங்கிலாந்திலும் பனிப்பொழிவுக்கான அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பிரித்தானியாவில் கிழக்கு பகுதி முழுவதுக்குமான பனிப்பொழிவு எச்சரிக்கைகளை வானிலை அலுவலகம் புதன்கிழமை வரை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்காட்லாந்தின் உயர் பகுதிகளில் 20-30cm (8-12in) வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அம்பர் எச்சரிக்கைகள் காரணமாக பனிப்பொழி்வு தொடர்ந்து இருக்கும் என்பதுடன், கனமாகவும் இருக்கும், இதனால் போக்குவரத்து மற்றும் பயன்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்படக்கூடும்.
தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் கிழக்கு ஆங்கிலியாவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 5 -10 செ.மீ வரை பனிப்பொழிவு இருக்கும், சில இடங்களில் 20 செ.மீ வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக காற்று வீசுவதால் குளிராக இருக்கும் என்பதுடன் மேலும் பனி நகர்ந்து போகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த இரண்டு நாட்களில் வானிலை நிலைமைகள் பிரித்தானியாவில் தடுப்பூசி திட்டத்திற்கு பெரும் சவால்களை உருவாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.