நாட்டின் நிலைமை இரண்டு வாரங்களில் மோசமடையும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை நாட்டில் தொற்று நோய்களின் உண்மையான சரிவாக இருக்காது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர், அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்கும் கோவிட் நோயாளிகளின் முதல் தொடர்புகள் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பி.சி.ஆர் சோதனையை விட அன்டிஜென் சோதனைகளில் வைரஸைக் கண்டறியும் உணர்திறன் குறைவாக உள்ளமையால், எதிர்காலத்தில் கோவிட் தொற்றுக்களில் சரிவு ஏற்படலாம்.இருப்பினும், இது தொற்றுக்களின் எண்ணிக்கையில் உண்மையான சரிவாக இருக்காது.
ஆனால் நிர்வாக முறை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட சரிவாக மாத்திரம் அது இருக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் மூலம் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு மோசமான தொற்று நிலைமை குறித்து உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றாமல் மக்கள் நடந்துகொள்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் விளைவு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தெரியவரும்.
எனவே பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படக்கூடாது, இந்த மாத இறுதி வரை அது
தொடர்ந்திருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ரோஹனா கூறினார்.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan