மலையகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் பண்டிகை ஆராதனை
ஜேசு கிறிஸ்து பிறந்த தினத்தை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
எப்பொழுதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது இந்தமுறை கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வீடுகளில் தனி மனித இடைவெளி கடைப்பிடித்து குடும்பத்தார் மட்டும் ஒன்று கூடிக் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் மலையகத்தில் இன்று கிறிஸ்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாக்கள் என இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் ஹட்டன் நகரில் உள்ள திருச்சிலுவை தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சில பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11