பிரித்தானியாவின் அழைப்பை ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி (Video)
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி முறைப்படி ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி செப்டம்பர் 18 ஆம் திகதி நிவ்யோர்க்கிற்குச் செல்வார் என்றும், செப்டம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்வார் என்றும் வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்பதாக பல நாடுகளின் அரச தலைவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல உலக செய்திகளை இக் காணொளியில் காணலாம்,

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
