கடந்த வாரம் உலகளவில் 71 சதவீதத்தினால் அதிகரித்த கோவிட் தொற்று
உலக அளவில் கோவிட் தொற்று கடந்த வாரத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை கோவிட் தொடர்பான உயிரிழப்பு 10 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 27ம் திகதி தொடக்கம் ஜனவரி 2ம் திகதி வரையிலான காலப்பகுதியில் உலகளவிலான கோவிட் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த வாரத்திற்கு முதல் உள்ள வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் 71 சதவீதம் கோவிட் தொற்று அதிகரித்துள்ளது. இதேவேளை, கோவிட் தொடர்பான உயிரிழப்பு 10 சதவீதம் குறைவடைந்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக 95 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த வாரம் கோவிட் தொற்று 100 சதவீதமாகவும், தென்கிழக்கு ஆசியப் பகுதியில் 78 சதவீதமும், ஐரோப்பிய மண்டலத்தில் 65 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் 40 சதவீதமும், மேற்கு பசுபிக் பகுதியில் 38 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 7 சதவீதமும் கொரோனா அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
