கொழும்பில் இடம்பெற்ற உலக நீர் தின நிகழ்வு
கொழும்பு - இரத்மலானையில் “சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் உலக நீர் தின நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (22.03.2024) இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
உலக நீர் தின நிகழ்வு
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் எஸ்.டீ. தர்மரத்ன சிறப்புரையாற்றியுள்ளார்.
இதன்போது உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடாளவீய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயமும், கடந்த க.பொ.த உயர் தர பரீட்சையில் 3 ஏ சித்திபெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ருவான் லியனகே உட்பட அமைச்சின் உயரதிகாரிகள், மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |